பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அதிரடியாகக் கைது!

நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்தின் அரச பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன் கோபால் சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல்களை நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.