இறுதி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்!! பின்னர் மணமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

இந்தியா - பீகாரில் இறுதி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி தன் மகனுக்கு சுவப்னா என்ற 21 வயது பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ரோஷன் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.

இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக இறுதி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார்.

விசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து குடும்ப கௌரவத்திற்காக சுவப்னாவின் தந்தை தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.

மகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.