ஆசியாவில் தோண்ட தோண்ட குவியல் குவியலாய் குவிந்த தங்கம் மற்றும் அரியவகை பொருட்கள்...எங்கு தெரியுமா?

மதுரை உள்ள கீழடியில் ஆராய்ச்சியில் தோண்ட தோண்ட குவிந்த தங்கமும், பழங்கால பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. மதுரை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து.

பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை இப்போது ஆய்வு செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். கீழடி அகழாய்வு உலக வரலாற்றையே மாற்றும், முக்கியமாக திராவிட ஆரிய வரலாற்றை தெளிவாக கூறும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 3000 பொருட்கள் இந்த ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

அதேபோல் இங்கு பல கோடி மதிப்பில் தங்கங்களும் காணப்பட்டு இருக்கிறது. 16 மீட்டர் தோண்டிய பின் இந்த தங்கம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 50க்கும் அதிகமான சிறு சிறு ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை இன்னும் தெளிவாக ஆய்வு செய்ய கலிபோர்னியா எடுத்து செல்ல இருக்கிறார்கள். ஆம் அங்கு கார்பண்டேட்டிங் செய்து இதை சோதனை செய்வார்கள். கார்பண்டேட்டிங் செய்வதன் மூலம் தெளிவான முடிவுகளை பெற முடியும் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக கலிபோர்னியாவிற்கு ஆய்வு பொருட்களை அனுப்பி உள்ளனர்.

ஏற்கனவே நேற்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது. வேண்டும் என்றால் மாநில தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திடம் கொடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.