சொந்த தங்கையிடம் மோசமாக நடந்துகொண்ட மூன்று அண்ணன்கள்! உறையவைக்கும் அதிர்ச்சி பின்னணி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை தவிர்த்துவிட்டு மாமாவின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் மூத்த அண்ணன்.

அங்கு வைத்து சிறுமியை மூத்த அண்ணன் மட்டுமல்லாமல் 17 மற்றம் 19 வயதுடைய இளைய அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், 40 வயதுடைய மாமாவும் இதற்கு கூட்டு சேர்ந்துள்ளார்.இந்த விவகாரம் அத்தைக்கு தெரிந்தும் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் மிகவும் அமைதியாக இருந்துள்ளார்.

இதனை தங்கை வெளியில் சொல்லிவிடுவாளோ என பயந்து மூன்று அண்ணன்களும் சேர்ந்து தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.