நாட்டிற்கு செல்ல விருப்பமில்லை என கூறி இந்திய குடியுரிமை கோரியுள்ள ஈழ ஏதிலிகள்!

இந்தியா தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில், இழ்ழ ஏதிலிகள் சுமார் 500 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், அவர்கல் தாம் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை என்றும், எனவே, தங்களிற்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு இராமேஸ்வரம் வந்த தமக்கு, ரேஷன் கடையில் தனி அட்டை வழங்கப்படுகிறதாகவும், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கும் என்றும், ஆனால், எங்கள் முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் அட்டையைப் பயன்படுத்த முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் தற்பொழுது தாம் இலங்கை சென்றால், தாங்கள் புது வாழ்க்கையைத்தான் தொடங்க வேண்டும் என்றும் எனவே மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் கால் நூற்றாண்டு கழித்து மீண்டும் இலங்கைக்குச் சென்றால், தம்மால் வாழ்க்கை நடத்த முடியாது எனவும், பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் ஏற்படும் எனவும் ஆதலால், தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.