பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் லோஸ்லியா !!

பிக் பாஸ் போட்டியாளர் லாஸ்லியா நடிகர் கமலை மரியாதைக் குறைவாக பேசியதாக இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.சென்னை: லாஸ்லியா மரியாதை இல்லாமல் கமலிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் மாதிரியே அவரும் அதிரடியாக வெளியேற்றப் படுவாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளே அதிக ரசிகர்களைச் சேர்த்தவர் லாஸ்லியா தான். முதல் நாளிலேயே அவருக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடந்த சீசன் ரித்விகா போல், பிரச்சினைகள் எதுவும் தலையிடாமல் இருந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக காதல் சர்ச்சையில் சிக்கினார்.

அதோடு, நாளடைவில் லாஸ்லியாவின் போக்கு சக போட்டியாளர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி வெறுப்பேற்றி விட்டது. இடையில் காதல் பிரச்சினையில் லாஸ்லியா நடந்து கொண்ட விதம், அவரை ரொம்ப ஆட்டிடியூட் கொண்டவராக காட்டியது. இதனால் கடந்த வாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டார்.

ஆனால், அந்த நாமினேசனில் தங்கள் தலைவியின் பலத்தை காட்ட வேண்டும் என லாஸ்லியா ஆர்மியினர் தீவிரமாக உழைத்தனர். அவர்களோடு கவின் மற்றும் சேரன் ஆர்மியும் சேர்ந்து கொண்டதால் எளிதில் வெற்றி சாத்தியமானது. இதனை கமல் அகம் டிவி வழியே லாஸ்லியாவிடம் தெரிவித்தார்.

கமல் லாஸ்லியாவை அழைத்த போது அவர், ‘ஓம்.. சொல்லுங்க’ என்றே கூறினார். தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் மாபெரும் நடிகரிடம், ஒரு சார் கூட போடாமல் லாஸ்லியா பேசியது மரியாதைக் குறைவாக இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதே போல், கடந்த வாரம் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டு விட்டார் என கமல் அறிவித்த போதும், அவர் தேங்க்ஸ் என்று மட்டும் தான் கூறினார்.

இதனால் கமலிடமே லாஸ்லியா ஆட்டிடியூட் காட்டியதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கமலிடம் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் சரியில்லை எனவும் சமூகவலைதளப் பக்கங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நிஜமாகவே அவர் தெரிந்து தான் இப்படி நடந்து கொள்கிறாரா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை நிஜமாகவே விளையாட்டுப் பிள்ளை தானா லாஸ்லியா என்ற சந்தேகமும் உள்ளது.

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இதே போல் மக்கள் மத்தியில் கமல் பற்றி மரியாதையில்லாமல் பேசினார் சரவணன். ‘இவன் கோர்த்து விடுறான்’ என சரவணன் பேசிய வீடியோ வைரலானது. அதிரடியாக அடுத்த சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இதேபோல் தற்போது லாஸ்லியா, கமலிடம் மரியாதைக் குறைவாகப் பேசும் வீடியோவும் வைரலாகி வருகிறது. எங்கே சரவணனைப் போல் லாஸ்லியாவையும் ஏதாவது காரணம் சொல்லி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விடுவார்களா என்ற சந்தேகமும் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பார்ப்போம் பிக் பாஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று.