பேருந்து நிலையத்தில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த கதி...!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாத குழந்தையை கடத்திச் செல்லும் காட்சி சி.சி.டிவிகளில் பதிவாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரினை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தை கடத்தப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகின்றதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை கடத்திய ஒரு இளைஞனும் ஒருபெண்ணும் குழந்தையின் தாயார் ராணியை அணுகி அவர்களுடன் உரையாடியதோடு, அவரை அழைத்துச் சென்று தனது குழந்தைக்கு ஒரு போர்வை மற்றும் மருந்துகளை வாங்கி கொடுத்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து தான் உறங்கியபோது, அவர்களும் அங்கேயே உறங்கியதாகவும் குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை கடத்திச் சென்று விட்டதாகவும் குறித்த தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.