யாழ் செல்வோம் - சென்னையில் கேக் வெட்டி கொண்டாடிய அலையன்ஸ் எயார்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று காலை திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் என்ற பெருமையினை இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் பெற்றுள்ளது.

அத்துடன் அலையன்ஸ் எயார் விமானமே யாழ்- சென்னைக்கான விமான போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளது.

அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் சென்னை -யாழ்ப்பாணம் விமான சேவை இன்று சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானியின் தலைமையில் நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய அஷ்வானி லொஹானி சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலானை விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதனை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாக யாழ்ப்பாண சர்வதேச விமன நிலையம் அமைந்துள்ளது.

இதேவேளை இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.