பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்.... இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி.!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறல் காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டு வருகிறது.

இருந்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்துகொண்டுதான் வருகிறது.

எனினும் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தியுள்ள தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடபில் தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.