கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் விநாயகர்!

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவமிக்க இந்து விழாக்களில் ஒன்றாக ஆவணி விநாயக சதுர்த்தி உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பெங்களூர் கலைஞர்கள் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

இதில் கொரோனா நோயளிக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் உதவியாளராக எலியும் கொரோனா நோயாளியும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் இந்த படைப்பானது கொரொனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வைத்தியர்களின் தியாகத்தை கௌரவிப்பதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்துள்ள கலைஞர்கள் ஸ்ரீதர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் "நாங்கள் கொரோனா வைரஸை எதிர்கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபட விநாயக சதுர்த்தி தினத்தில் பிரார்த்தனை செய்யுமாறு ஸ்ரீதர் கேட்டுகொண்டுள்ளார்.

இம்மாதம் 22 ஆம் திகதி விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இந் நிலையில் இந்தியாவின் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக பல மாநிலங்களில் பாதுகாப்பான முறையில் கணேஷ் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.