கைத்தொலைபேசி வெடித்ததில் தாய், இரு மகன்கள் பலி!

இந்தியாவில் கரூர் அருகே கைத்தொலைபேசி வெடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கைத்தொலைபேசி வெடித்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்தின் போதே நித்திரையில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

வீட்டினுள் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, அருகில் நித்திரையில் இருந்த போது செல்போன் வெடித்ததாக கூறப்ப்டுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே தாயார் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், வீட்டில் சிக்கி இருந்த இரண்டு மகன்களையும் மீட்டனர்.

அதன்பின்னர் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படவே, வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.