கவலைக்கிடமான நிலையில் S.P.பாலசுப்பிரமணியம்…

முழுவிபரம் இதோ...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் மைல்ட் கொரோனா பாஸிட்டிவ் என்பதால் மருத்துவர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு கூறியதாவும், ஆனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறினார்.

தனக்கு லேசான கொரோனா பாதிப்புதான் என்றும் விரைவில் வீடு திரும்புவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

By Suhas -

August 14,

Lanka 2020