பாடகர் எஸ்.பியின் நிலை தொடர்பில் மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்

தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் எக்ஸ்மோ கருவி மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.