மறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசேட அரசாணையினை பிறப்பித்துள்ளார்.

அதன்படி சகல அரச மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்.பி.பி.யின் மறைவையடுத்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் ,

“தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த எஸ்.பி.பி, இந்திய இசை உலகத்திற்கு 20ஆம் நூற்றாண்டில் இறைவன் அளித்த இனிய கொடையாக வந்துதித்தார்.

மிக அதிகமான பாடல்களைப் பாடி புகழின் உச்சிக்கே சென்ற எஸ்.பி.பி.யின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை இரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மறைந்த SPB எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.