தமிழக மக்களை ஏமாற்றிய பிக்பாஸ் கமல்ஹாசன்!

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைமுறைகளாக திராவிட முன்னேற்றக்கழகம் அங்குள்ள சில கட்சிகளுக்கெல்லாம் தாய் கட்சியாக் விளங்கிவருகின்றது.

இந்த தி.மு.க-வில் முக்கிய பொறுப்பிலிருந்த நிலையில் முரண்பாட்டோடு வெளியேறிய எம்.ஜி.ஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,

அதன்பின்னர் தொடர்ந்து தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியும் கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்த போதே நோய்வாய்ப்பட்டு இறந்தார்

எம்.ஜி.ஆர் இறந்ததன் பின்னர் பல போராட்டத்திற்கு பின்னர் ஜெ.ஜெயலலிதா அ.தி.மு.க-வை தலைமையேற்று வழிநடத்தி சென்றார்.

மறுபுறம் கருணாநிதி தி.மு.க-வை தலைமைதாங்கி வழிநடத்தி வந்த நிலையில் இந்த அதிமுக – திமுக கட்சிகளே மாறி மாறி முதலமைச்சர் பதவியை கைப்பற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவாகி நேர்மையான, ஊழலற்ற ஆட்சியமைக்க வேண்டும் என்பதே தமிழக புத்தியீவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் இவர்களுக்கு போட்டியாக பலர் கட்சி ஆரம்பித்திருந்தாலும் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே ஒரளவிற்கு வளர்ந்து வந்தது, எனினும் அதன் பின்பு அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஏமாற்றமளித்தது.

தற்போது அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைமையில் ஸ்டாலினும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக எந்த கட்சியுடன் கூட்டணி சேராமல் பல வருடங்களாக போராடி வளர்ந்து வருகிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி.

இவ்வாறான நிலையில் நாமே மாற்று என தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பரபரப்பாக மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை உருவாக்கி கடந்த இந்திய மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியைவிட குறைந்த வாக்குகள் பெற்று நடிகர் உலகநாயன் கமல்ஹாசன் படுதோல்வியடைந்தார் .

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி போல் மக்கள் நீதி மய்யம்மும் வரும் எனவும் , எதிர்வரும் 2021 ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமென எதிர்பார்த்த நிலையில் , மு.க,ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக்கத்துடன் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இணைந்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள மொத்த சட்டமன்ற தேர்தல் தொகுதியான 234 தேர்தல் தொகுதியில் 25 தேர்தல் தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக-வால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவை தவிர கமல்ஹாசனும் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமிழக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அவர்களின் கூட்டணிகள் சம்மந்தமான உத்தியோகபூர்வ தகவல் விரைவில் வெளிவருமென அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.