இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் சிறுமியின் சடலத்தைத் தெரு நாய் கடிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான 20 விநாடிக் காணொளியில், வைத்தியசாலையின் தனிமையான பகுதி ஒன்றில், ஸ்ட்ரெச்சரில் ஓர் உடல் கிடத்தப்பட்டுள்ளது. வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த சடலத்தை ஒரு நாய் தொடர்ச்சியாக, மெல்லக் கடிக்கிறது.
வீதி விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தாரா அல்லது வைத்தியசாலையில் அவருக்கு உயிர் பிரிந்ததா என்று கூறப்படவில்லை.
संभल में स्वास्थ्य सेवाओं की रोंगटे खड़े कर देने वाली खौफनाक तस्वीर आई सामने।जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों की लापरवाही की वजह से स्ट्रेचर पर रखे बच्ची के शव को कुत्तों ने नोच कर खाया। जांच करा लापवाही बरतने वालों के खिलाफ हो सख्त कार्रवाई। शोकाकुल परिवार के प्रति संवेदना! pic.twitter.com/3tgEHCTQpb
— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020
இது குறித்து சிறுமியின் தந்தை , ஒன்றரை மணி நேரமாக எனது மகளின் உடல் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு வைத்தியசாலையின் அலட்சியமே காரணம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே வைத்தியசாலையில் தெரு நாய்கள் தொல்லை இருப்பதை வைத்தியசாலை நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று வைத்தியசாலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் வைத்தியர் தெரிவித்துள்ளதாவது,
வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்கள்.
அப்போது சடலத்தின் அருகே யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சி, ''இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளது.