விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவியை பாட்டு பாடி, மனதை மாற்றிய கணவர்

உத்தரப்பிரதேசத்தில் கணவன் மீது புகாரளிக்க காவல் நிலையம் சென்ற மனைவியை கணவன் பாட்டுப் பாடி மனதை மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், கணவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்கும் ஆலோசனை மையத்திற்கு இருவரையும் வருமாறு அதிகாரிகள் அழைக்க அவர்களும் வந்துள்ளனர்.

வந்த இடத்தில் கணவர் அருமையான காதல் பாட்டு ஒன்றை பாட அதைக் கேட்ட மனைவியின் மனதும் மாறியது. இதனை ஐபிஎஸ் அதிகாரி மதுர் வர்மா என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது இந்த செய்தி நீதிமன்றத்திற்கு விவாகரத்து கேட்டு சென்ற மனைவியை கணவன் பாட்டு பாடி மாற்றிய கூறி வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.