உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் இன்று!

குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்கு கொண்டுவருவோம் – கனவுகளை நனவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் ஆண்டுதோறும் 1500க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலக்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறும் உரிமை உள்ளதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது

மேலும் சிறுவர் துஷ்பிரயோகம், பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், வன்முறை மற்றும் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.