பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் தகவல்கள் இழப்பீட்டு அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் 263 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , அதில் 201 பேருக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதற்காக அரசாங்கத்தால் 198, 525,000/- (198 மில்லியன்) ரூபா நிதி பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் 500 பேரில் 438 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கத்தால் 64,287,500/- (64 மில்லியன்) ரூபா நிதி பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை செலுத்தப்பட்டுள்ள முழு இழப்பீட்டுத் தொகை 262,812,500/- (262 மில்லியன்) ரூபா ஆகும்.

இதுதவிர தாக்குதலில் பாதிப்படைந்த தேவாலயங்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு ஆகியவற்றால் 25 மில்லியன் ரூபா நிதி இராணுவப் படை மற்றும் கடற்படைக்கு முற்பணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.