வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள்! வேடிக்கையல்ல! வேதனை!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது பலருக்கு தாம் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதையே மறந்துவிட்டு அவர்கள் பண்ணும் அலப்பறைகள் இருகின்றதே! அப்பப்பா!

இவற்றில் பல உண்மை மட்டுமல்ல பலரும் இதை எண்ணி வேதனைப்படவேண்டியதும் கூட,

அந்தவகையில் முகநூல் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்துவரும் நம்மவர்கள் பற்றி பகிர்ந்திருந்த டொப் டென் விடயங்கள் இவை-

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரியும் நம்மவர்கள் கேட்டால் சுத்தமாம்

2) அங்கு இருந்து "toilet tissu" வோடவே வருவாங்க..

(இது அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க (தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க.

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது என குறைகூறுவது.

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்வார்கள். (ஆங்கிலம் ஒரு

8) கடைசியில் போகும் போது புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வான்ங்கி போவாங்க

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று ஆனால் நிலமை வேற !

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி அவங்க பில்டப் பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

இது எல்லோரிற்கும் அல்ல தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்...