வட்டிக்கும் கந்துவட்டிக்கும் என்ன வித்தியாசம் ?

பணம் என்றாலே பிரச்சனையில் தானே முடியும்... அதனால் தான் "கடன் அன்பை முறிக்கும் என்று அன்றே தெரிவித்து உள்ளனர்.

கந்துவட்டி

பணம் இருப்பவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு வட்டிக்காக பணம் கொடுப்பதே கந்து வட்டி என்று கூறலாம்.என்ன ஒரு முக்கியமான செய்தி என்றால். கந்து வட்டியில் அதிக அளவில் வட்டி பிடிப்பார்கள்,வட்டி கட்டவில்லை எனில், அதற்கும் இன்னொரு வட்டி போட்டு வட்டி வாங்குவார்கள்.

ஒரு வேளை கொடுக்க தவறும் சமயத்தில், அதாவது வட்டி கட்ட கூட தவறும் சமயத்தில், வீட்டை தேடி வந்து அசிங்கப்படுத்தி பேசுவதும், பின்னர் மிரட்டுவதுமாக வாழ்க்கை ஓடும்.பின்னர் காவல் நிலையம், பஞ்சாயத்து ....இதுதான் கந்து வட்டி வாழ்க்கை..

இதில் பறிபோவது நிம்மதியும் மானமும் மரியாதையும் தான் .

வங்கியில் பெறப்படும் பணத்திற்கு வட்டி

கந்து வட்டி ஒருபக்கம் இருக்கட்டும், வங்கியில் பெறப்படும் பணத்திற்கு எந்த அளவிற்கு வட்டி என்பது, நாம் எதற்காக எவ்வளவு பணம் பெறப்போகிறோம், எத்தனை ஆண்டுகள் பணத்தை திரும்ப செலுத்த எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொருத்தது.அவ்வாறு வங்கியில் இருந்து பணத்தை பெறுவதற்கு முன்பாகவே, நம்மிடம் உள்ள எல்லா விதமான டாக்குமென்ட்ஸ் சரிபார்க்கபடுகிறது.

வீட்டு உரிமை பத்திரம் முதல் கொண்டு அனைத்தும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும்..அதாவது அடமானம் வைத்து தான் பணத்தை பெற முடிகிறது அல்லது நாம் வாங்கும் சம்பளத்தை பொருத்து பணத்தை கொடுக்குது வங்கிகள்

இவ்வாறு பெரும் பணத்திற்கு வட்டி உண்டு ....

மேலும் இதே போன்று கிரடிட் கார்டு பெற்று அதன் மூலம் முன்னதாகவே ஆடம்பரமாக செலவு செய்கிறோம் அல்லவா....இதை பயன்படுத்திவிட்டு சரியான சமயத்தில் பணத்தை கட்டவில்லை என்றால், வங்கியில் இருந்து குண்டர்கள் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்....

ஆக மொத்தத்தில் வட்டி வட்டி தான் ...இடம் பொருள் மட்டும் தான் மாறுபடும்.......