யாழ்ப்பாணத்தில் தற்பொழுது வலுவான காற்று: மக்களே அவதானம்!

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது வலுவான காற்று: மக்களே அவதானம்!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையின் காரணமாக ஆங்காங்கே மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது வலுவான காற்றுடன்கூடிய தூறல் மழை பெய்து வருகிறது.

முன்னிரவு வேளையில் தொடங்கிய இந்த காற்று வீசல் தற்பொழுது சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இது புயலுக்கான அறிகுறியோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தற்பொழுதும் கடும் காற்றுடன்கூடிய மழை பொழிந்துவருவதனால் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையோரம் ஓங்கி வளர்ந்துள்ள மரங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் வேண்டப்படுகின்றனர்.