அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க போகிறதா ரஷ்யா!!

ரஷ்யாவிற்கு சொந்தமான போர்க்கப்பலில் அதிக விளைவை ஏற்படுத்தக் கூடிய இரண்டு போர் வாகனங்கள் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த 7-ஆம் திகதி சிரிய அரசுப் படையினர் நடத்திய இரசாயன தாக்குதலில் 75-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க கூட்டுப்படையினருடன் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவில் இருக்கும் இரசாயான ஆயுத கிடங்கில் தாக்குதல் நடத்தினர்.

சிரியா அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் ரஷ்யா இதற்கு நிச்சயமாக இந்த வாரத்தின் இறுதியில் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை ரஷ்யாவிற்கு சொந்தமான போர்க்கப்பலில் போர் வாகனங்கள் உட்பட பல இராணுவ உபகரணங்கள் வந்திருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிரிய கடற்கரையின் Tartus பகுதியில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்திற்கு செல்லும் வழியில் இந்த கப்பல் காணப்பட்டது.

இதில் ரஷ்ய இராணுவ உபகரணங்களை கப்பல், டிரக், ஆம்புலன்ஸ்கள் மற்றும் IED ரேடார் ஆகியவை காணப்பட்டன.

அதுமட்டுமின்றி ஒரு மஞ்சள் நிற கப்பல் ஒன்றில் அதிவேக ரோந்துப் படகுகள், ஒரு தற்காலிகமாக பாலங்கள் போன்றவைகள் கட்டப்பட்டு வருவதால் ரஷ்யா பதிலடி கொடுப்பதற்கே இந்த வேலைகளை செய்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.