சவுதியில் ஆண் பாடகரை கட்டிப் பிடித்த இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிரடி தண்டனை: வைரலாகும் வீடியோ

சவுதிஅரேபியாவில் ஆண் பாடகரை கட்டிப் பிடித்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சவுதிஅரேபியாவில் பெண்கள் பொது இடங்களில் ஆண்களுடன் இணைந்து இருப்பதற்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் டாய்ப்பின் வெஸ்டர்ன் சிட்டியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடர் மஜித் அல்-மோஹன்டீஸ் பாடல் பாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது பார்வையாளராக இருந்த இளம் பெண் ஒருவர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்தார். இதனால் அங்கு உடனடியாக சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பின் மேடைக்கு சென்ற பொலிசார் அப்பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஈரானில் பிறந்து சவுதியில் வசித்து வரும் பாடகர் அல்-மோஹன்டீஸ், இச்சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் தனது இசை நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது!