இனி விசா தேவையில்லை : கட்டார் அரசின் அதிரடி அறிவிப்பு..

கட்டார் மீது சவுதி அரேபியா தலைமையிலான அண்டை நாடுகள் தடை விதித்திருந்தன. அண்டை நாடுகளின் தடையால் பெருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டார் பலவேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

கட்டார் விமான சேவையை அதிகரிக்கவும் அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கவும் இந்தியா உட்பட 80 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்று கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா உட்பட 80 நாடுகளிலிருந்து வருபவர்கள் தனியாக விசா பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாட்டு விமானநிலையத்தில் இறங்கியவுடன் வருகை விசா (Visa on Arrival) முறையில் அங்கேயே விசா வழங்கப்படும்.

அந்நாட்டின் தலைநகர் டோஹாவில் செய்தியாளர்களை சந்தித்த கட்டார் சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரி ஹஸன் அல்-இப்ராஹிம், விசா நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளதன் மூலம் கட்டார் அரபு நாடுகளுள் மிகவும் சுதந்திரமான, அனைவரும் அணுகக்கூடிய நாடாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விசா அனுமதி தேவையில்லாத நாடுகளின் பட்டியலை தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.