65 வயது தாத்தாவை திருமணம் செய்து கதறும் 16 வயதுச் சிறுமி

ஓமான் நாட்டைச் சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயதுச் சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அச்சிறுமி ஷேக்குடன் மஸ்கட்டில் வசித்து வருகின்றார்.

5 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு ஷேக் வாங்கியுள்ளதாகவும் இதற்கு தனது கணவரின் அக்கா உடந்தையாக இருந்ததாகவும் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சிறுமியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கட்டில் இருந்து தொலைபேசியில் பெற்றோர்களிடம் பேசிய சிறுமி, நீங்கள் என்னை இங்கிருந்து காப்பாற்றவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன்.. என கதறிஅழுதுள்ளார்.