யார் முதலில் என்ற சண்டையில் அவசரப்பட்ட காதலி! இரத்த வெள்ளத்தில் காதலன்

காதலர்களுக்கு இடையே யார் சமைப்பது என்ற சண்டையில், பெண் தனது காதலரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த எல்வி உஜூம்மா என்பவர் டெல்லியில் தனது காதலர் ஈசுவுடன் வசித்து வந்தார். ஈசு மதியம் வீடிற்கு வந்தவுடன் யார் சமைப்பது என்று இருவருடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஈசு முதலில் எல்வியை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த எல்வி கத்தியால் தனது காதலரை குத்தியுள்ளார். ஈசு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் எல்வியை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.