அரபு நாட்டில் இப்படியும் ஒருவர்! கட்டார் இளைஞனின் கருணை உள்ளம்..

வீட்டில் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்களை துன்புறுத்தும் பல கதைகளை தொடர்ந்து கேட்டு வருகின்றோம்.

பணிப்பெண்ணை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு உருகும் கட்டார் இளைஞரின் காணொளி வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

கட்டாரைச் சேர்ந்தவர் அல்நமா என்ற 20 வயது இளைஞன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் வீட்டில் 20 வருடமாக பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்த ஜூபைதா என்ற பெண் குறித்து உயர்வாக குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சுபைதா எங்கள் வீட்டுக்கு பணியாளராக 20ஆண்டுகளுக்கு முன்வந்தார். எங்கள் வீட்டில் ஒருவராக எங்கள் அண்ணியாக அவர் எங்களிடம் அன்புகாட்டினார். எங்கள் வீட்டின் ஏழாவது உறுப்பினர் அவர்.

எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகிடைத்தால் முதன்முதலாக பிலிப்பைன்சில் எங்கள் அண்ணியை பார்க்கத்தான் செல்வேன். அவரில்லாமல் என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு எப்படி வாழ்வேன் என்பதை நினைக்க கடினமாக உள்ளது.

பிலிப்பைன்சில் உள்ள மக்கள் கட்டார் குடும்பங்களை மிகவும் அன்புடன் நேசிக்கின்றனர். இதற்கு எங்கள் ஜூபைதா அண்ணி ஒரு சாட்சி.

கட்டார் நாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ள இச்சூழ்நிலையில் பிலிப்பைன்ஸ் மக்களின் அரவணைப்பு எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று அவ் இளைஞன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிலிப்பைன்சின் தேசிய மொழியில் அவர் பேசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இக் காணொளிக்கு டுவிட்டரில் ஆதரவு கருத்துக்கள் பெருகி வருகின்றன.