கிம் ஜாங் நாட்டில் இப்படிபட்ட வாழ்க்கையா வாழ்கிறார்! வெளியான அதிர்ச்சி தகவல்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆட்சியில், பெண்களை கட்டாய ராணுவத்தில் உட்படுத்தி மிருகத்தனமான பாலியல் விடயத்திற்கு பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் ஆட்சியில் இருந்தபோது, ‘Pleasure Squad' எனும் பெயரில் பருவ வயது பெண்களை இழுந்து வந்து அடைத்து வைத்துள்ளார்கள்.

அந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்களை ராணுவ வீரர்களே சென்று ஒவ்வொருவராக தெரிவு செய்கிறார்கள். சில சமயங்களில் கிராமங்களில் இருந்தும், சில சமயங்களில் பள்ளிகளில் இருந்தும் பருவ வயது அடைந்த பெண்களை வலுக்கட்டாயமாக ராணுவ பணிக்கு இழுத்து வருகிறார்கள்.

ஆனால், ராணுவத்தில் 'Pleasure Squad' எனும் தனிப்பிரிவில் இந்த பெண்களை சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் பெண்களுக்கு பல பரிசோதனைகள் சீரான இடைவெளியில் செய்யப்படும்.

குறிப்பாக, அவர்களின் கன்னித்தன்மை குறித்த சோதனை, பாலியல் ரீதியாக ஏதாவது செய்துள்ளார்களா என்பது போன்ற பரிசோதனைகள் இதில் அடங்கும்.

பள்ளி மாணவிகளை அழைத்து வரும் போது, அவர்களிடம் மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், இங்கிருக்கும் பெண்களில் பலரை மிருகத்தனமான பாலியல் விடயங்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த குழுவில் இருக்கும் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியை ஷேவிங் செய்து கொள்ள வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

கிம் ஜாங் உன் கடந்த 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கிம் ஜாங் உன், Pleasure Squad மற்றும் அதனை கட்டமைத்த அதிகாரிகள் உட்பட அனைவரையும் மாற்றிவிட்டு புதிதாக உயரமான, அழகான பெண்களை தெரிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு, Pleasure Squad-யில் இருந்து தப்பி வந்த ஜி ஹைன் எனும் பெண் ஒருவர், தங்களை வெறும் கைகளால் கழிவறைகளை கழுவ சொல்லி துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.

மேலும், அங்கே தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள, சிலர் எலிகளை உண்டு வாழ்ந்து வருவதாகவும், வடகொரியா நாடே ஒரு பெரிய சிறைச்சாலை என்றும் தெரிவித்திருந்தார்.