பங்களாதேசில் தொலைக்காட்சி பெண் நிருபர் கொடூரமான முறையில் கொலை...பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

பங்களாதேசில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா தொலைக்காட்சிசேவையில் நிருபராக பணியாற்றி வந்த 32 வயதான சுபர்னா அக்டெர் நோடி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், நாளிதழிழ் ஒன்றிலும் நிருபராக உள்ள இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதுடன் தனது 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்ற சுமார் பத்து பேர் கொண்ட குழு ஒன்று கூரிய ஆயுதங்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் நிருபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்ற இன்று உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் அவரது முன்னாள் கணவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.