கொரோனா நேயாளிகளை வித்தியாசமான முறையில் குணப்படுத்த முயன்ற மதகுரு! வெளியான காணொளி

ஈரானில் மதகுரு ஒருவர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைரஸை குணப்படுத்தும் வாசனை திரவியத்தை வழங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

குறித்த வாசனை திரவியம் இறைவனிடம் வைத்து பிராத்தனை செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,610 உயர்ந்துள்ளது.

குறித்த மதகுரு திரவியத்தை ‘இஸ்லாமிய மருத்துவம்’ என்று நம்புவதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரவித்துள்ளனர்.

பெரும்பாலும் நவீன மருத்துவத்தை நிராகரிக்கும் ஷியா மதகுருக்கள், "இஸ்லாமிய மருத்துவம்" நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர்.


குறித்த வீடியோவில் மதகுரு இரண்டு நோயாளிகளின் மேல் உதட்டிற்கு மேலே வாசனை திரவியத்தை தேய்த்து, அதை முகர்ந்து பார்க்க சொன்னார்.

படுக்கையில் கிடந்த ஒரு நோயாளியிடம் மதகுரு கூறியதாவது, அதை முகருங்கள் நீங்கள் நன்றாக வருவீர்கள் என கூறினார்.

சில சமூக ஊடக பயனர்கள், மதகுரு எந்தவிதமான பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நெருக்கமாக இருப்பதை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

loading...