லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த தமிழர்களுக்கு கொரோனா உறுதி! வெளியான தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதில் 2 பேர் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இப்போது, இந்தியாவை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள், அங்கிருக்கும் மருத்துவமனையில் தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வந்தவர்கள்.

ஒருவர் சென்னை புரசவாக்கத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க நபர், மற்றொருவர் 48 வயது மதிக்கத்தக்க நபர், இவர் திருப்பூரை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மூன்றாவதாக, மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர், இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

loading...