கொரோனா வைரஸ்... வேதனையை அதிகரிக்குமாறு கடவுளை பிராத்திக்கும் அமைப்பு... யார் தெரியுமா?

நம்பிக்கையற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் வேதனையை அதிகரிக்குமாறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடவுளை பிராத்திக்கின்றனர்.

நம்பிக்கை அல்லாதவர்களின் கொரோனா வைரஸ் வேதனையை அதிகரிக்க ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிராத்தனையில் ஈடுபட்டுள்ளதுடன், தொற்றுநோய் காரணமாக கிறிஸ்தவ நாடுகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும் பெருமிதம் கொள்கின்றன.

ஐ.எஸ் அமைப்பு அவர்களின் அல்-நாபா வெளியீட்டிலிருந்து ஒரு புதிய செய்திமடலை வெளியிட்டுள்ளது. அது வைரஸ் பரவுவதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.

அல்-மஸ்தார் பத்திரிக்கையின் படி, கடவுள் 'தனது படைப்பால் உருவான நாடுகளின் மீது கடும் வேதனையை சுமத்தியுள்ளார்' என்று கூறி அவர்கள் கட்டுரையைத் தொடங்குகிறார்கள்.

எந்தவொரு நம்பிக்கையும் இல்லாத நாடுகளில் வேதனையை அதிகரிக்கவும், விசுவாசிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கவும் நாங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளது.

மேலும், இந்த வைரஸ் தீவிரத்தால் கிறிஸ்தவ நாடுகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அதனை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கூறி பெருமிதம் தெரிவித்துள்ளது.