சீனாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட 108 தன்னார்வலர்கள்... 18 பேரின் உடல்நலம் குறித்து தகவல்!

சீனாவின் வுகானை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு முதல் கட்ட பரிசோதனைகளை முடித்து கொண்ட நிலையில் அதில் 18 பேரின் உடல்நலம் குறித்து தெரியவந்துள்ளது.

உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் அதன் தொடக்கத்தை கண்டது.

இந்த கொடூர வைரஸால் உலகளவில் இதுவரை 53,238 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனோவை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தி தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றது..

இந்நிலையில் சீனாவின் வுகானை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் முதற்கட்ட பரிசோதனையாக கொரோனாவை தடுக்கும் தடுப்பூசிகளை தங்களுக்கு செலுத்தி கொண்டனர்.

இதில் 18 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை வியாழன் அன்று முடித்து கொண்டனர்.

இதை தொடர்ந்து அவர்களின் உடல்நிலையையும், தடுப்பூசி அவர்களுக்கு ஏற்று கொண்டதா என்பதையும் அறிய சிடி பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அதன்முடிவில் 18 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.