சீனாவில் பரவும் புதிய நோய்..! 2020 இறுதிவரை எச்சரிக்கை விடுப்பு

சீன பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள நகரத்தில் புபோனிக் பிளேக் நோய் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பல உறுப்பு செயலிழப்பால் இறந்ததை அடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் பிளேக் நோய்கள் பொதுவானவை, இருப்பினும் நோய் பரவுதல் மிகவும் அரிதாகிவிட்டன. 2009 முதல் 2018 வரை சீனாவில் 26 பிளேக் வழக்குகளும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், நோயாளி ஒருவருக்கு புபோனிக் பிளேக் இருப்பது உறுதி செய்யப்பட்டது என பேயன் நூர் நகர சுகாதாரக் குழு அறிவித்துள்ளது.

புபோனிக் பிளேக் மிகவும் மோசமான நோய் தொற்று மற்றும் பெரும்பாலும் எலிகள் போன்ற கொறித்துண்ணிகளால் பரவக்கூடிய அபாயகரமான நோய்.

பேயன் நூர் நகர சுகாதாரக் குழு மூன்றாம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டது, நோய் பரவுவதைத் தடுக்க வெள்ளிக்கிழமை முதல் 2020 இறுதி வரை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியா பிராந்தியத்தில் இந்த மாதம் பதிவான பிளேக் நோயாளியின் இரண்டாவது மரணம் இதுவாகும்.

வியாழக்கிழமை, பேயன் நூர் நகரத்தை ஒட்டியுள்ள பாடோ நகரில் அதிகாரிகள், குடல் வகை பிளேக் கொண்ட நோயாளி ஒருவர் முக்கிய உடலுறுப்பு செயலிழந்ததால் இறந்ததாக தெரிவித்தனர்.

இறந்த நோயாளி வாழ்ந்த பகுதியை பேயன் நூர் அதிகாரிகள் முடக்கியுள்ளனர் மற்றும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து 7 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

தற்போது வரை 7 பேருக்கு நடத்தப்பட்ட சோதனைியல் நோற்றுத்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது, அவர்கள் தடுப்பு மருந்துகளை எடுத்து வருகின்றனர்.