சட்டத்தின் பிடியிலிருந்து ரணில் தப்பவே முடியாது!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி இடம்பெற்றுள்ளது என்று ஜே.வி.பிதான் முதன்முதலில் உண்மையை வெளிவுலகத்திற்கு கொண்டுவந்தது.

இதையடுத்து இவ்விவகாரத்தில் பிரதமருக்கும் தொடர்புள்ளது என்றும் நாம்தான் தகவல் வெளியிட்டிருந்தோம்.

இவ்வாறு, நாம் கூறியவைதான் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டிருக்கின்றன.

இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது.

இதேவேளை, இது அவர்களுக்கான பாரிய ஒரு தோல்வியாகவே அமையப்போகின்றது என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.