இலங்கை இராணுவத்தைக் கண்காணிக்கும் இந்தியாவின் புதிய செய்மதி...

இலங்கை இராணுவத்தைக்  கண்காணிக்கும் இந்தியாவின் புதிய செய்மதி...

இந்தியாவினால் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ள புதிய செய்மதியின் மூலம் இலங்கையின் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டு விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் ஊடாகமான tribune.com.pk இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இஸ்ரே தமது 100வது செய்மதியை நேற்று விண்ணில் ஏவியது. அதனுடன் மேலும் 30 செய்மதிகள் ஏவப்பட்டன.

இவ்வாறு ஏவப்பட்ட செய்மதி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், சீனா உள்ளிட்ட நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க இந்தியா பயன்டுத்த உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.