பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.

சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளதாகஅறியமுடிகின்றது.

இன்று காலை முதல் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாடுகள்குறித்து ஜனாதிபதியிடம் இதன்போது எடுத்துரைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.