ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிரடி முடிவு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு முந்திர பருப்புகளை விநியோகிக்கும் விநியோகஸ்தரை மாற்ற அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நேபாளத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த போது அவருக்கு கொடுத்த முந்திரி பருப்பு மனிதர்கள் உண்பதற்கு ஒவ்வாதது எனவும் நாய்கள் கூட அதனை சாப்பிட முடியாது எனவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை அடுத்த மேற்படி தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு துபாய் நாட்டை சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர், முந்திர பருப்புகளை விநியோகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.