இங்கிலாந்து வெம்பிளி பார்க் இலங்கைக்கும் தேவை

உலகத்திலும் இல்லாத நியாயமான நீதிமன்றம் இலங்கையில் செயற்படுவதாகவும் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு தனியான அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். ஜனாதிபதி கூறும் எந்த கதையை நம்புவது என்று தெரியவில்லை.

இங்கிலாந்தில் வெம்பிளி பார்க் என்ற இடத்திற்கு சென்று இரண்டு பவுண்களை செலுத்திய பின்னர் எவரையும் விமர்சித்து பேச முடியும். ஒரு முறை நான் அங்கு இருந்த போது, ஒருவர் மகாராணியை விமர்சித்தார்.

இலங்கையிலும் அப்படியான ஒரு இடம் தேவை. தற்போதுள்ள நீதிபதிகள் தெய்வங்களை போன்றவர்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.