மைத்திரிக்கு பதிலடி கொடுத்த ஜேர்மன் தூதுவர்

ஜேர்மனியில் சுமார் ஆறு மாதங்கள் அரசாங்கம் ஒன்று இல்லாமல் ஜேர்மனிய சான்சலர் நாட்டை ஆட்சி செய்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

தனது நாடான ஜேர்மனியை சுட்டிக்காட்டி,ஜனாதிபதி தனக்கு சாதமாக உண்மையை திரிபுப்படுத்தியுள்ளதாக ஜேர்மனிய தூதுவர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சில காரணங்களுக்காக அரசாங்கங்கள் இல்லாமல் இருந்தமைக்கான உதாரணங்களை கொண்ட நாடுகள் உலகில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாட்டின் போது கூறியிருந்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்கினார். அவர் தனது புதிய அரசாங்கத்திற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள 6 மாதங்களுக்கும் மேலான காலத்தை எடுத்துக்கொண்டார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி, ஜேர்மனியில் நடந்த விடயத்தை சரியாக அறிந்துக்கொள்ளலாம் தனக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளதாக ஜேர்மனிய தூதுவர் கூறியுள்ளார்.

புதிய தேர்தலுக்கு பின்னர் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலைமையும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியும் சமமானவை அல்ல எனவும் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலைமையை உதாரணமாக எடுத்து, ஜனாதிபதியின் தலையீட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜேர்மனிய தூதுவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு சாதகமான ஜேர்மனியின் விடயங்களை எடுத்து, அவற்றை திரிபுப்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனிய தூதுவர் இது சம்பந்தாமாக இலங்கையில் உள்ள சில ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமான கலந்துரையாட ஜனாதிபதி சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு ஜேர்மனிய தூதுவர் கோரியுள்ளார். எனினும் இதுவரை அவருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.