செங்கலடி பிரதேச செயலாளரின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யாது மூடி மறைத்தது யார்?

தற்போது 205081க கடமையாற்றும் வில்லவரெட்ணம் அவர்களின் ஊழல்கள் குறித்து முன்னாள் அரசாங்க அதிபர் பி. எஸ்.எம் சாள்ஸினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆதாரவூர்வமான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாது மூடி மறைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

மாவட்ட செயலாளர் ஒருவரினால் பிரதேச செயலாளர் ஒருவர் செய்த ஊழல்கள் குறித்து சட்ட பூர்வமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யப்படாது மூடி மறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது?

வில்வரெட்ணம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது முறையற்ற விதத்தில் காணிகளை மோசடியாக பெற்றமை மற்றும் பகிர்ந்தளித்தமை, மண் வியாபாரத்தை பினாமி களையும் அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள் இணைப்பாளர்களை வைத்துக்கொண்டு செயற்படுத்தியமை அத்துடன் வனவளங்களை அழித்தல், காட்டு மரங்களை அரச காணியில் உள்ளவைகளை தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வெட்டுவதற்கு அனுமதி அளித்தமை போன்ற பல ஆதாரவூர்வமான குற்றச்சாட்டுக்கள் இன்று வரை விசாரணை செய்யப்படாமல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை இது குறித்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காது மூடி மறைக்கப்பட்டு வருவதன் பின்புலம் என்ன என்பதை ஆராய்ந்து வெகு விரைவில் வெளியிடவுள்ளோம்.

குறித்த பிரதேச செயலாளர் சம்பந்தமாக பல குற்றச்சாட்டுகள் தற்போதைய மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும் அது குறித்து கவனம் செலுத்தாது இருப்பது ஏன்?