மனித உரிமைப் பேரவை அறிக்கை முழுமையாக ஏற்கப்பட மாட்டாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை முழுமையாக ஏற்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே திலக் மாரப்பன இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அதிகாரபூர்வமாக அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்கும் எனவும் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.