விண்வெளி பொறியியலாளரான ரோஹித கொழும்பு பல்கலைக்கழக ஊழியரானது எப்படி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளி பொறியாளராக அடையாளப்படுத்தும் ரோஹித ராஜபக்ச, பல்கலைக்கழகத்தின் கல்வி ஊழியராக செயற்படுவதென்பது சிக்கிலுக்குரிய விடயமாகியுள்ளது. இந்நிலையில் அவரது கல்வி தகுதி தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பல்லைக்கழக பட்டியலில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவர் எந்த விதத்திலும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் தொடர்புப்பட்டதில்லை என கொழும்பு பல்கலைக்கழக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுப்ரிம் செட் செயற்கோளை விண்ணுக்கு ஏவுவதற்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

இலங்கையின் முதலாவது செயற்கோள் என அடையாளப்படுத்தும் இந்த திட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வர்த்தக உதவியாளரான மணிவானன் என்பவர் செயற்பட்டுள்ளார்.

அவர் தற்போதுவரையில் லித்துவேனியா நாட்டின் தூதராக தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்சவுக்க குறித்த திட்டம் ஊடாக பணம் செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தினால் இராஜதந்திர சேவையில் வைத்திருப்பது சிக்கிலுக்குரிய விடயமாகும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.