நாட்டு மக்களை எச்சரிக்கும் மைத்திரி!

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சொக்கலட் கலக்கப்பட்டுள்ள மைலோ பானத்தில் அதிக அளவில் சீனி மட்டம் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக 5 வீதம் சீனி காணப்பட வேண்டும் எனினும் மைலோவில் 16.5 வீதம் காணப்படுகின்றது.

எனினும் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நீரிழிவு தின நடைப் பயணத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்கள் முழுவதும் பன்னாட்டு பால்மா நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான கொள்கையில் இருந்த ஜனாதிபதியினால் இந்த நாட்டில் உள்ள பிரதான பன்னாட்டு பால்மா நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.