தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கேசப் கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில், அதுல் கேசப் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலேயே இலங்கைக்கான தூதுவர் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்களில் அமெரிக்கத் தூதுவர் கடுமையாக தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த தலையீடுகள் விரைவில் நீங்கும் என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுல் கேசப் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கு விசுவாசமானவர் எனவும், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இலங்கைக்கு புதிய தூதுவர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தூதுவர் நியமிக்கப்படுவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராம்பின் புதிய தூதுவர் இலங்கை விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்ய மாட்டார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.