பாராளுமன்ற தேர்தல் எப்போது தெரியுமா? வெளிவரும் உயர்மட்ட தகவல்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் அரங்கு மிகவும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

மைத்திரியின் இந்த திடீர் அறிவிப்பு பல வெளிநாட்டு இராஜதந்திரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன் அமெரிக்காவின் சீற்றத்திற்கும் உள்ளாகியுள்ளது.

நாடாளுமன்றம் இரவு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை ஜனாதிபதி மைத்திரி மக்களுக்கு தெளிவுபடுத்தல் உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் எப்போது நடாத்தப்படும் என்பது தொடர்பிலான தகவல்கள் கொழும்பு அரசியல் மட்டங்களில் பரவலாக பேசப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடாத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன.

2015 ஆம் ஆண்டும் ஜனாதிபதி மைத்திரி ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.