தமிழர் பகுதிக்குள் ஹிஸ்புல்லாக்கை போல புகுந்து விளையாடும் ரவூப் ஹக்கீம்!

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் யாழ்.பல்கலைக்கழகத்தில் 65 முஸ்லிம்களை நியமிக்கவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் இருந்து அரசியல் பரபரப்புக்களுக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாக் பதவி ஏற்று கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 65 முஸ்லிம்களை ரவூப் ஹக்கீம் நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர்களுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் இன்றும் நிறையவே இருக்கின்ற நிலையில் இப்படியான ஒரு நியமனம் தேவையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ்வாறு பதவி வழங்கப்படுமாக இருந்தால் அது "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே“ அமையும். காரணம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அரசியல் தீர்வு இப்படி பல விடயங்கள் தமிழர்களுக்கு செய்ய வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள், முஸ்லிம் என்ற ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தும் செயலாகவே இது காணப்படுகின்து. கிழக்கு ஆளுநரின் பதிவி நியமனத்தை எதிர்த்து தமிழ் தரப்புகளிடம் போராட்டம் வெடித்துள்ள சூழலில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இப்படியான ஒரு பதவி வழங்களை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்குவது நியாயமா என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.