ரணிலின் போட்ட மெகா பிளான்: மீண்டும் எம்.பியாகும் சந்திரிக்கா: மகிந்தவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி ஒருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்தா வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது...

ஐ.தே.கட்சி தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே இந்த எம்.பி பதவி விலகுகிறார் எனக் கூறப்படுகிறது. சட்டம் மற்றும் அரசமைப்புத்துறையில் இவர் தேர்ச்சி பெற்றவராவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் சிலரே இதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவிடயத்தில் சு.க. எம்.பிக்கள் சிலரும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.

சிலவேளை, ஐ.தே.கட்சி தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் வந்தாலும் சுதந்திரக்கட்சி எம்.பிக்களின் ஆசியுடன் சந்திரிக்கா அம்மையார் சுயாதீனமாகவே செயற்படுவார். அவருக்கு உயர்நிலை பதவியொன்றும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த - மைத்திரி அரசியல் ரீதியாக மரண அடி கொடுப்பதற்காகவே ஐ.தே.கட்சியால் இந்த வியூகம் வகுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. எனினும் இது குறித்து சந்திரிக்கா அம்மையாரின் நிலைப்பாடு என்னவென்று இன்னும் வெளியாகவில்லை.

தேர்தலில் போட்டியிடாத மற்றும் முன்கூட்டியே தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாத நபரொருவரை எம்.பியாக நியமிப்பதற்குரிய சட்டரீதியான ஏற்பாட்டுக்கு இடமிருக்கின்றது.