சுயநல அரசில் தம் சுயநலம் கருதியே கூட்டமைப்பும் செயற்படுகிறது: டக்ளஸ்!

அரசாங்கம் சுயநலம் கருதியே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான நிலையிலேயே செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சி, செல்வாநகர் மக்களுடன் நேற்று முந்தினம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் அரசுடன் எதிர்க் கட்சியினர் ஆதரவு கொடுத்து செயற்பட்ட வரலாறு கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.